NOTE: 2011-05-23T14:48:48+05:30

பண்டைத் தமிழ் நூலின் பண்பெல்லாம்  ஈத்துவக்குந்தொண்டுபுரி  ஒளவை துரைசாமி – தண்டமிழ்க்குவள்ளல்! தனியாண்மைச் செம்மல் ! வாழ்கபலவெள்ளங்கள் வென்று விழைந்து !                              1வாயில் தமிழ் முழக்கம்  வாழ்வில் தமிழியக்கம்பாயில் துயில்போதும் பைந்தமிழே -நோயில்படுப்பினும்  பண்டமிழின்  பண்பார்  பணி செய்தெடுத்ததுரை சாமி புகழ் ஏற்று!                                     2அவ்வையைப் போற்றுதும் அவ்வையைப் போற்றுதும்செவ்வை உரை செழித்த  சீர்த்தியால்!-ஒவ்வாப்பகைநலிய  பன்னலமும்  பைந்தமிழ் போல்  ஓங்கத்தொகையுரை வேந்து வாழ்க சூழுந்து!                         3                                                                             -புலவர் தி. நா .அறிவொளி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *