கொடுங்கோல் வேந்தன் என்ற கொலைப்பழிப்பூண்ட கடாபி ஊர் நலத்தையும் கருதியிருக்கிறாராம். சீரான மருத்துவமும், சிறப்பான கல்வியும் செழித்து வளர பல திட்டங்களை வகுத்து நிறைவேற்றினார். கல்வியும் நல்லுடலும் பெற்ற இளைஞர்கள் நலம் செய்ததை பெற்று மகிழ்ந்தாலும், குலநாசம் செய்ததை கொடுங்கோலனை கொன்றுத்தீர்த்தார்கள்
மக்களாட்சி தானாக மலர்கிற நூற்றாண்டுத் தான் கடந்த இரு நூற்றாண்டுகளாகும். அரசர், மன்னர், வேந்தர், மன்னர் மன்னன் என்ற சொற்களே கொடுங்கோன்மையின் தோள்களை அலங்கரித்த பொன்னாடைகளாகும்.
மறந்தும் கவிஞர்களும், கலைஞர்களும், அறிஞர்களும், சிந்தனையாளர்களும், விஞ்ஞானிகளும், கதை எழுதுபவர்களும், பல வேடம் பூணும் பரிகாசத்துக்குரியவர்களும் தங்கள் பெயர்களில் தானாக இவைகளை நீக்கி விடுவது நல்லது!! கோப்படும் இளைஞர்களின் கூட்டம் பெருகி வருகிறது!!!

Add a Comment