இன்றைய அறிவியல்,பொறியியல் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் இளையோர்கள் நெஞ்சில் ஈரம் ஊறுவதற்கு வகையில் கலையிலக்கியப் பொது நிலை கலைகளைக்கூட பாடமாக,பயிலரங்காக நடத்த வேண்டும்மென்று இந்தியத் தொழில் மேலாண்மை நிறுவனங்கள் கருதுகின்றன.இதைத் திருடு
என்று சொன்னால், என்ன அந்தப்பெட்டிக்குள் இருக்குது என்பது அறிவியற் சிந்தனையாகும்.ஏன் நான் எதனையும் திருட வேண்டும் என்று மனம் சொல்லுமானால் அது கலையிலக்கிய கல்வியால் வருகிற பயற்சியாகும்.எதையும் ஆராயும் மனம் வளரந்திருக்கிறதே தவிர ஏன் இதனை ஆராய வேண்டும்,பொது மக்களுக்கு எவ்வளவு நலம் உண்டாகும் என்கிற
போக்கு வளரவில்லை,படரத் தெரிந்த கொடி தான் கண்ணுக்குத் தெரிந்ததேத்தவிர தான் பயணம் செய்த தந்கத்தேர் பெரிதாக படவில்லை என்றல்லவா பாரியின் கதை உணர்த்த வேண்டும். Cassius உன் கைகள் தினவெடுக்கும் கைகளாக எனக்குத் தெரிகின்ற அது கையை நீளமாக்கும் விருப்பத்தை பேராசையாக்கும் இறுதியில் வீழ்ச்சியில் தள்ளும் என்று சீசர் பேசுகிறார்.அரசை பறிப்பது என்ற ஆசை வந்தால்,வீட்டுக்கு வந்த விருந்தினர் என்று கூட கருதாமல் கொலை செய்யத்திருமதி மாக்பெத் திகழ்கிறாள்.அளவில்லாத நிதிகள் Shylock ஆக மாற்றும்.எனவே ஈரம்,இரக்கம் இணைந்து அறிவுத்திரட்சியால் மேலாண்மைக்கு வெற்றித்தரும்.மாணவர்களுக்கு IIM பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனாரம்.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
கல்வி மரங்களாக்குவதைக்காட்டிலும் நிமிர்ந்து நெளிந்து வளைந்து கொடிகளாக படர்வது நல்லது

Add a Comment