ஒன்றல்ல கருதுப கோடி பல என்பது திருக்குறள்.ஒரு நாள் மனம் எத்தனை பொருண்மைகளை எப்படியெல்லாம் அலை பாய
மனத்தில் புரள்கின்றன என்பதை எண்ணி நாள் ஒன்றுக்கு ஆங்கிலத்தில் ஒரு புதிய தொடர் சேர்கிறது என்று இன்றைய
இந்து நாளிதழிலில் ஓர் எழுத்துரை இடம் பெற்று இருக்கிறது .கைபேசியே ஒரு நூலாகவும்,படமாகவும்,உரையாடும் ஒலியாகவும் இயலிசை நாடகம் போல மூன்று அடுக்குகளைக் கொண்டு இருக்கிறது.இதனால் கைபேசி ஆறாவது விரலாகிவிட்டது.ஒரு கணம் இது நின்றால் ஒரு பெரிய மருட்சி ஏற்படுகிறது.ஈர்ப்புச்சுட்டிடம் கிடைக்காததால் கைபேசி ஊமையாகிறது, இதற்கு என்றே ஒரு தொடர் பிறந்து Cell Phone Samba இருக்கிறது.செவ்வாய் தோஷம் என்பது போல,ஒன்பதாம் எண்ணை பழிப்பது போல பதிமூன்றை கண்டு அஞ்சுகிற மடமை சில நாடுகளில் நிலவுகிறது.அதற்க்கு என்றே ஒரு தொடர் பதின்மூன்று எழுப்பு / பதின்மூன்று இழுப்பு என்றே நோய்க்கு பெயரிடலாமா என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லுண்டு Triskaidekaphobia. ஆண்,பெண்,அலி என்பது மூன்று வகையான சொற்கள்.அலியை நேற்று வரை கணக்கு எடுப்பதில்லை. ஆணானன்,பெண்ணானன்,அலியானன் காண்
என்று கடவுளையைக் குறிப்பார்கள்.கடவுளையைக்குறித்த சொல் எவ்வளவு கேலிக்கு ஆளாயிற்றுப்பாருங்கள்.இதுபோலத்தான் Gay என்ற சொல்லும் இரண்டாம் தர பொருளுக்கு இறங்கிவிட்டது.

Add a Comment