இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம் (மார்ச் 2005) என்ற நூல் தமிழில் ஐயாத்துரை சாந்தன் என்பவரால் எழுதப்பட்டது. இந்த நூலில் ஜெர்மனி, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க மாநிலங்கள் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார். பின்னர், கறுப்பர் இலக்கியம், செவ்விந்தியர் இலக்கியம், இலத்தின் அமெரிக்க எழுத்தாளர்கள், ஸ்பானிய, பிரெஞ்சு, போர்த்துக்கீசிய, இத்தாலிய, ஹங்கேரி, யூத, பாலஸ்தீனம் எழுத்தாளர்கள் என்றெல்லாம் எழுதி அறிமுகஞ்செய்துவிட்டு ஆபிரிக்க, தென்னாபிரிக்க எழுத்தாளர்களுக்கு வருகிறார். கியூபா, கரிபிய தீவுகள், அண்மைக்காலப் புதிய நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. கிழக்கே, ஜப்பானிய மற்றும் ஆஸ்திரேலிய, நியூஸிலாந்து, தென் கொரியா, இந்தியா, மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் முக்கிய எழுத்தாளர்கள் பற்றியும் அவர் அறிமுகங்களைத் தருகிறார். ஒரு தமிழன் எவ்வளவு விரிவாக உலகத்தைப் பார்க்கிறான் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது……

Add a Comment