POST: 2012-01-24T17:07:20+05:30

நாட்டை ஆளும் நிதி மந்திரியின் மகள் நடனம் நடந்துகொண்டிருக்கிறது.வங்கி அதிகாரிகள் அனைவரும் நடனத்திற்கு வந்துவிட்டார்கள்.களவு போனால் என்ன? நாட்டியம் தெரிந்தவர்கள் நாலே பேர் தான் வந்திருந்தார்கள்.பெரும்பாலும் நடக்க முடியாதவர்கள் என்ற வகையில் கைத்தாங்கலாக மூவர் முதல் வரிசையில் இருந்தனர்.நாட்டியத்தில் வா கண்ணா வா என்று பாட்டைக்கேட்டு கண்ணாபிரான் என்ற ஒருவர் மேடை ஏறி விட்டார்.கதக் நடனத்தில் மூன்று அடி பின் சென்று முகம் திருப்பி மீள வருவார்கள்.பின் சென்றதைப்பார்த்து ஆடல் முடிந்து விட்டது என்று பல தொண்டர்கள் கைத் தட்டினார்கள்
கதக் முடிகிறவரை பதக் பதக் என்றது வங்கி அதிகாரிகளின் இதயம்……

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *