35 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவும் இந்தியாவும் சோர்ந்திருந்தன.இன்று நம் கண் எதிரிலேயே விண்ணை இடிக்கின்ற அளவிற்கு வெற்றிக்கொடிகள்
பட்டொளி வீசிப் பறக்கின்றன.35 ஆண்டுகள் எந்த மானங்கெட்ட அரசு இந்தியாவை ஆண்டது? நான்கு மடங்கு பெரிய நாடு என்று சொன்னாலும்
சீனாவின் கால் செருப்புக்கூட நம் நாட்டின் தொழில்கள் வளரவில்லையே? இறக்குமதி என்று எதுவும் இல்லையாம்,எல்லாமே ஏற்றுமதி!
இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் பைத்தியக்காரத்துணைவேந்தர்களின் தலைமையில்,தப்பித்தவறி மாணவர்கள் பித்தம் பிடிக்காமல் திரும்பி வருகிறார்களே என்று உலகம் நம்மை வியக்கிறது.கொலைகாரன் வீட்டுப்பிள்ளை எப்போதோ கொள்கை வீரனாக மாறுவது போல மாணவர்கள் விளங்குகிறார்கள்.பாழடைந்த செஞ்சிக்கோட்டைகள் போல பல்கலைக்கழக மேடுகள் இந்தியநாடு முழுவதும் காணலாம்.விலை கூவி பல்கலைக்கழகங்கள் விற்கப்படுகின்றன.இங்கே நாட்டை மொட்டை அடிப்பவர்களும்,அவர்களை எதிர்ப்பவர்களும்,அவர்கள் வழியில் வந்தவர்களும்
மொட்டை அடிப்பதும் எதைக்காட்டுகிறது இலட்சியங்களை இழிந்த தலைமுடியைப் போல!

Add a Comment