புரட்சி நடிகரைத்தான் போர்ப்புலி என்று புவியில் போற்றுவார்கள்.மேனி பெண்ணாலும் புலியின் மீது பாய்ந்த வாணி நீ புகழ் வளர்த்த லட்சுமி! மிரட்சிக்கொண்டாராம் புரட்சி நடிகர்.இப்படி
வளர்ந்து தன்னந்தனியாய் தமக்கையாய்,தங்கையாய்,தகுதி மிகுந்த ஒரு தாயாய் ஆயிரம் படங்களில் நடித்த அற்புதத்தாரகை தளர்ந்த அகவை தான் எனினும் தளராது இருந்தாய்! உதிர்ந்தது மலர்! எங்கள் உள்ளம் அதிர்ந்தது!!
அண்மையில் கூட அன்னையோடு இருந்து படங்கள் சிலவற்றை நீக்கக்குழுவில் இருந்தப்போது பார்த்தேன்.பரிவோடு பேசி தங்கள் பாசச்சொற்களை உறவோடு எண்ணி உருகி நிற்கிறேன்….

Add a Comment