புலவர்களுக்கு எதிரே தன் தோளில் (சேக்ஷ்ப்பியர்) புகழ்மாலை விழவில்லையே என்ற ஏக்க வரிகள்தான் பதினாங்கு அடி விருத்தத்தினை வருத்தமாக எழுதப்பட்டது
வேட்கை இல்லா வெற்று வாழ்க்கை
அடுத்தவர்க்கு அல்லல் தருவது
அமைந்த குணமே உடையவராயினும்
எடுத்து இன்னொருவருக்கு துன்பம்
எப்போதும் செய்யார்.
நிரம்பச் செய்யும் நினைப்புடையவராக
நேர் நின்றாலும்
துரும்பும் கூட எந்தத் துளியும் செய்யமாட்டார்
உருகுவது போலத் தோன்றும் இவர்கள்
ஒரு சிறிதும்
அசையாத பெருங்கல்
கவர்ச்சியும் காட்டமாட்டார்
கடுகளவும் கவலைப்படாத மெத்தனத் தோடு மூழ்கியிருப்பார்.
இவர்களைத்தான் சொர்க்கம் இங்கே வா என்று அழைக்கும்
தோன்றும் இயற்கையெல்லாம்
இவர் தோள்களில் மாலை சூட்டும்
எது செய்தாலும் அவர் இச்சைக்கு ஏற்றது
அவர்களுக்கு அவர்களே தலைவர்கள் அவர்களே அதிபர்கள்.
மற்றவர் எல்லாம் அவர் முன் மண்டியிடுவார்கள்
வேனிலில் பூக்கும் அவவெள்ளரிப்
பூவிலோ தன்னந்தனியாய் தானே உதிரும்
இப்படி இழிவு ஏற்படுமானால்
எப்புறம் உள்ளது
ஏளனம் இனிப்பது கூட செய்யும்
இந்த நிலையில் கசப்பாய் மாறும்
முல்லைக்கூட இதனால் கள்ளியாய் முடியும் !

Add a Comment