POST: 2012-03-04T20:39:49+05:30

அகர முதல எழுத்தல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

உரை நடைத்தென்றல்
(பேராசிரியர் முனைவர் ஒளவை நடராசனாரின்
பன்முக ஆளுமைச் சிறப்பு)

கட்டுரையாளர்
கு. பாலசுப்பிரமணியன்இ எம்.ஏ.டிப்.இன்.ஜர்னலிசம்
மொழிபெயர்ப்புத் துணை இயக்குநர் (ஓய்வு)
தமிழ்நாடு அரசு

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்தின்; மேனாள் துணைவேந்தர் முனைவர் ஒளவை நடராசனாரைத் தமிழ் கூறும்; நல்லுலகம் முழுமையும் நன்கறியும.; அவர் துணைவேந்தராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் தமிழ் நாட்டரசின் தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுத் துறையின் அரசு செயலாளராக ஏறத்தாழ எட்டாண்டுக் காலம் (1984-1992) பணியாற்றினார.; அதற்கு முன்னர தமிழ்நாட்டரசின் பொதுத்துறையின் ஓர் அங்கமாக இருந்த மொழிபெயர்ப்புப் பிரிவின் இயக்குநராகப் பத்தாண்டுக்காலம் (1975-1984) பணியாற்றினார.

நான் இப்பெருமகனாரைக் கடந்த நாற்பதாண்டுகளாக நன்கறிவேன.; அவர் மொழிபெயர்ப்பு இயக்குநராகவும் அரசு செயலாளராகவும் பணியாற்றிய காலத்தில் ஏறத்தாழ 18 ஆண்டுகள் அவருடன் கூடவே இருந்து அவர் கட்டளையிடும் பணிகளைச் செவ்வனே மன நிறைவுடன் ஆற்றிய பெருமையும் வாய்ப்பும் பெற்றவன் யான.; அவருக்குரிய தலைசிறந்த சிறப்பு-எல்லாக் காலத்திலும் எல்லாவிடத்திலும் யாவரும் உணர்ந்து அறிந்த சிறப்பு-அவர் எப்பொருள் பற்றியும் எந்நேரமும் யாவரையும் ஈர்க்கும் வகையில் ஆற்றொழுக்காக உரையாற்றும் வன்மையை-நாவன்மையைப் பெற்றிருந்தார் பெற்றிருக்கிறார் என்பதேயாகும். “கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல” என்னும் குறட்பாவிற்கு அவரது உரையில் இடம் பெறுகிற சொற்களே எடுத்துக்காட்டும் விளக்கமும் ஆகும். அதனால்தான் அவர் நாடு போற்றும் நாவேந்தராக உரையாற்றும்; உரைவேந்தராகத் திகழ்கின்றார.

இவருடைய நாவன்மை தமிழ்மொழி இலக்கியத் துறையிற்போலவே இலக்கிய வரலாறு இலக்கிய பண்பாடு இலக்கிய சமூகவியல் இலக்கிய கவிதைகள்-படைப்பிலக்கியங்களின் திறனாய்வு ஆகிய துறைகளிலும் பெருவீச்சு உடையதாக இருந்தது. தொடக்க காலத்தில் மூத்த பேராசிரியர்களான அ.சா.ஞானசம்பந்தனார் போன்றோர் தலைமையில் உரைகளும் ஆற்றினார். பின்னர் இவரே பட்டிமன்ற நடுவராகப் பொறுப்பேற்றுப் பல இலக்கியஇ சமுதாயத் தலைப்புகளில் அமைந்த பட்டிமன்றங்களில் தமது அறிவாற்றல் மிக்க உரைப்பெருக்கினை வழங்கியுள்ளார்.

பல்வேறு அவைகளிலும் மன்றங்களிலும் பேசுகின்ற இவரது பேச்சைக் கேட்க அந்நாளில் கல்லூரி மன்றங்களில் கூட்டம் அலைமோதும். வாரியார் சுவாமிகளுக்கு அடுத்த நிலையில் பெருங்கூட்டத்தினரை ஈர்த்தபெருமை இவருக்கு உண்டு. அக்காலத்தில் அரசியல் தலைவர்களாக விளங்கிய பேரறிஞர் அண்ணாஇ பேராசிரியர் அன்பழகனார்இ நாவலர் நெடுஞ்செழியனார் முத்தமிழறிஞர் என இன்று போற்றப்படும் கலைஞர் ஆகியவர்களுக்கு அடுத்த நிலையில் பேச்சினால் பெருங்கூட்டத்தைக் கட்டிப்போடுகின்ற பெருவல்லமை இவருக்கு இருந்தது.

தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தங்கு தடையின்றிச் சொற்பொழிவாற்றுகின்ற திறமை இவருக்கு இருந்ததை அறிந்து நாங்கள் வியந்ததுண்டு. இதனால்இ இப்பெருமகனார் நான் அரசுப் பணியாற்றிக்கொண்டிருந்த அந்நாளில, இன்றும் நம்மிடையே வாழ்ந்துவரும் மூத்த பெருந்தமிழறிஞர் கு. இராஜவேலு ஐயா அவர்கள் 1975 இல் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது அவரையடுத்து மொழிபெயர்ப்பு இயக்குநராகப் பணியி;ல் அமர்த்தப்பெற்றுப் பொறுப்பேற்றார் என்பதில் வியப்பேதுமில்லை!
மொழிபெயர்ப்புத் துறையில் இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில் தமிழ் நாட்டரசின் தலைமைச் செயலகத்தில் அங்கமாகவுள்ள அரசின் அனைத்துத் துறைகளிலிருந்தும் கோப்புகள் மொழிபெயர்ப்பிற்காகவும் தமிழாக்கத்தை தமிழ் நடையை ஆய்வு செய்து வழங்குவதற்காகவும் வரும். அவை அனைத்தையும் பொறுமையாகப் படித்து விளங்கிக்கொண்டு நல்ல தமிழாக்கம் நல்ல தமிழ் நடையில் வழங்குவது மொழிபெயர்ப்புத் துறையின் கடமை. சுருங்கச் சொன்னால் தமிழ் ஆட்சி மொழியாக அரியணை ஏறி அமர்ந்து கோலோச்சுவதாக இருப்பினும்இ மொழியாக்கம் என்னும் செல்வச் செவிலித்தாயின் இருகரம் பற்றியே தலைமைச் செயலகத் துறைகளில் தமிழ் தளர் நடைபயின்று வந்தது.
சட்டமன்றப் பேரவையில் இடம் பெறுகின்ற வினாக்கள்இ துணை வினாக்களுக்கான குறிப்புகள் சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் பல்வேறு திர்மானங்களுக்கான குறிப்புகள் பொதுக்கணக்குக்குழுவிற்;கான குறிப்புகள் ஆகியவை யாவும் இயக்குநரின் நேரடிப்பார்வைக்கும் ஒப்புதலுக்கும் வைக்கப்பெறும். மேலும் பொதுத்துறை தலைமைச் செயலாளரின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள துறை என்பதாலும்இ அது முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள துறை என்பதாலும்இ மிகக் கமுக்கக் கோப்புகளும் சட்டம் -ஒழுங்குப் பிரச்சனைச் சார்ந்த குறிப்புக் கோப்புகளும் நீதி விசாரணை அறிக்கைகள் முதலானைவையும் மொழிபெயர்ப்பு இயக்குநரின் முதன்மை நாட்டத்திற்கு உரியன. இவ்வாறு வரப்பெறும் பணிகளில் இயக்குநர் பணி அரசில் மிக இன்றியமையாத சிறப்புப் பணியாக அமைந்தது. இக்கால கட்டத்தில் முதற்கண் கலைஞர் அவர்களும் (1975-76)இ பின்னர் (1977-84) எம்.ஜி.ஆர். அவர்களும் (இடையில் 1976-77 ஓராண்டுகாலம் ஆளுநர் ஆட்சி நடைபெற்றது). முதல்வர்களாகப் பணியாற்றிய போது உரைவேந்தர் ஒளவை அவர்கள் இயக்குநராகச் செவ்வனே பணியாற்றினார்.

1984 ஏப்ரல் 17-ஆம் நாளில் தமிழ் நாட்டரசு தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுத்துறை என்று புதிய துறை ஒன்றை உருவாக்கி முனைவர் ஒளவை நடராசனரை அத்துறையின் அரசு செயலாளராக நியமித்தது.

1984-இல் புதிதாக உருவாகிய தமிழ் வளர்ச்சி-பண்பாட்டுத்துறையின் கீழ் அமைந்த ஏறத்தாழ ஒன்பது துறைத்தலைமை அலுவலகங்களும் ஒரு பல்கலைக்கழகமும் இரண்டு கல்லூரிகளும் இச்செயலாளரின் பொறுப்பின் கீழ் வந்தன. அத்துறைத்தலைமை அலுவலங்களாவன:
1. மொழிபெயர்ப்புத் துறை (தலைமைச்செயலகத்தில் உள்ளது)
2. தமிழ் வளர்ச்சி இயக்ககம்
3. கலை-பண்பாட்டுத் துறை
4. அருங்காட்சியகத் துறை
5. தொல்லியல் துறை
6. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்
7. ஓவிய நுண்கலைக்குழு
8. சுவகர் சிறுவர் இல்லம்
9. இயல் இசை நாடக மன்றம்
10. தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்
11. சென்னை கலை – கைத்தொழில் கல்லூரி
12. மாமல்லபுரம் சிற்பக்கலைக் கல்லூரி
சட்டத்துறைச் செயலாளரும் சட்டமன்றப் பேரவைச் செயலாளரும் இந்திய ஆட்சிப்பணி அலுவலர் அல்லாதவர்கள். அவர்களைப்போன்றே இ.ஆ.ப. அலுவலர் அல்லாத தமிழறிஞராகவுள்ள இப்பெருமகனார் முதன் முதலில் அரசு செயலாளராக அமர்த்தப்பெற்றார் என்பது தமிழ்கற்றோர்க்குப் பெருமை அன்றோ?

கா. அப்பாத்துரையாரின் கழகக் கையகராதி நூலை மொழிபெயர்ப்புப் பிரிவில் மட்டுமின்றி அரசுத்துறைகள் அனைத்திலும் பிரிவிற்கு ஒன்று வீதம் வாங்கிப் பயன் கொள்ளச் செய்தது குறிப்பிடத்தக்க ஆட்சிமொழி வளர்ச்சிக்குத் துணை நின்ற செயல் எனலாம்.
அரசு செயலாளராக ஒளவை அவர்கள் பதவியேற்ற பின் தமிழ் வளர்ச்சிக்கு அளப்பரிய தொண்டாற்றியுள்ளார் எனலாம். உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்தமிழ் வளர்ச்சி இயக்ககம் தொல்பொருளாய்வுத்துறை ஆகியன பல்வேறு படி நிலை வளர்ச்சிகளைக் கண்டன. கலை-பண்பாட்டுத்துறை புதிதாக உருவாக்கப் பெற்று வளர்ந்தது இவர் காலத்தில் தான். சேயலாளரான பிறகும் மொழிபெயர்ப்புத் துறையின் தொடர் வளர்ச்சியில் நாட்டம் கொண்டிருந்தார். புதிதாகப் பணியிற் சேருவோர்க்கு ஆழ்ந்த பயிற்சி வழங்கச் செய்தார்;
ஒளவை அவர்கள் தமிழ்ப்பல்கலைக் கழகத்துணைவேந்தராக மூன்றாண்டுக் காலம் பணியாற்றி தமிழ்மொழி இலக்கிய வளர்ச்சிக்குச் சீரான சிறப்பான தொண்டு புரிந்தார். அவ்வமயம் தஞ்சையில் எட்டாம் உலகத்தமிழ்நாடு ஏற்றமுடன் நடைபெற அரசுக்கு உறுதுணையாக இருந்தார். இச்செய்தி அனைவரும் அறிந்ததே. இவர் 1981-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டிற்கு வரவேற்புக்குழச் செயலாளராக இருந்து அறிஞர் பெருமக்களை மாடமலி கூடற்பெருநகர்க்கு அழைக்கும் பெருமை பெற்றார். அவ்வமயம் நான் அப்பணிக்கு துணை புரிய அவருடைய அணுக்க உதவியாளராக அவரால் அமர்த்தப்பட்டேன். அரசு ஜீப் வண்டி ஒன்று என் பொறுப்பில் விடப்பட்டது. அறிஞர் எழுத்தாளர் கவிஞர் அனைவருக்கும் மாநாட்டிற்கான அரசு அழைப்பிதழை நேரில் கொடுக்கும் பணியைச் செய்தேன்.
அந்நாளில் தலைமைச் செயலாளர் பொதுச்செயலாளர் நிதித்துறைச்செயலாளர் சட்டத்துறைச் செயலாளர் என்று அனைவரிடமும் வாய்ப்பு நேர்ந்தபோது என்னை உயர்வாக அறிமுகம் செய்துள்ளார். ஒளவை அவர்கள.; இதன் காரணமாகவேஇ நான் நிதித்துறை வரவு-செலவுத் திட்ட வெளியீடுகளின் மொழியாக்கப்பொறுப்பு அலுவலராக ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வாய்ப்பும் பெருமையும் பெற்றேன். தமிழ் நாட்டரசில் இன்றளவும் இந்திய ஆட்சிப்பணி உயர் அலுவலர்கள் என்மீது அன்பும் பெருமதிப்பும் காட்டிவரும் சிறப்பினை நான் பெற்றேன்.
மொழிபெயர்ப்புத்துறையில் இயக்குநர் அவர்கள் பல்வேறு கால கட்டங்களில் பணியாளர்களுடன் அமர்ந்து பல்வேறு சுவையான விவாதங்களை நடத்துவதுண்டு. இலக்கியச் செல்வராக விளங்கிய ஒளவை அவர்கள் எல்லோரும் இலக்கியப்புலமைஇ தமிழ்ப்புலமை மற்றும் ஆங்கிலப் புலமையுடையவராக இருக்க வேண்டும்இ புலமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். ஒருமுறை “நமது துறை எப்படி இருக்கிறது” என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் “கல் மருங(;கு) எழுந்து என்றும் ஓர் துளிவரக் காணா நன் மருந்து” போல உள்ளது” என்று விடையளித்தேன். (இது நடந்தது 1976-77-இல்) அந்த வினாவும் விடையும் வழங்கிய நாளில் மாலையில் ஒளவை அவர்கள் கம்பராமாயணம் தொடர்பிலான பட்டிமன்றம் ஒன்றிற்குத் தலைமை தாங்குவதாக இருந்தது. “கல்லில் விழுந்து முளைத்து இலைவிட்டு நீரின்றி வாடிநிற்கும் கற்பக தருவின் வித்துப்போல சீதை அசோகவனத்தில் வாட்ட முற்றிருந்தாள்” என்பது இதன் பொருள். அதைக்கேட்டதும் அவர் முகத்தில் புன்னகை பிறந்தது. அந்த வாரத்தில் துறை வளர்ச்சிக்கான கூட்டம் ஒன்றைக்கூட்டினார். புதிதாக 4 பணியாளர்கள் பணியிடம் தோற்றுவிக்க அரசாணை வழங்கப்பட்டிருந்தது. முன்னரே 3 பணியிடங்கள் நிரப்பப்படாமலிருந்தன. நேர்முகத் தேர்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் 20 பேர் கலந்து கொண்டனர். எழுத்துத் தேர்வும் நேர்முகத் தேர்வும் நடத்திஇ 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உடனடியாகப் பணியிற் சேர்ந்தனர். ஒருநாள் எங்களை அழைத்து இப்போது வாட்டம் நீங்கிவிட்டது அல்லவா? என்று கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பட்டப்படிப்பு படித்திருந்த பணியாளர்கள் எல்லோரும் மாலை நேரக் கல்லூரியில் தமிழ் எம்.ஏ.வகுப்பில் சேருவதற்குத் தூண்டி ஊக்கப்படுத்தினர். அதனால் பலரும் எம்.ஏ.வகுப்பில் சேர்ந்து பட்டம் பெற முடிந்தது. குறிப்பிடப்படவேண்டிய செய்தியாகும். என்னுடன் பணியாற்றிய எனது அன்பு கெழுமிய நண்பர் அமரர் திரு ச.க. அறிவரசன் அவர்களை இங்கு குறிப்பிடவேண்டும். அவர் எம்.ஏ (ஆங்கிலம்)இ எம்.ஏ.(தமிழ்)இ எம்.எல்.இ பி.எட் ஆகிய பட்டங்களைப் பணியிலிருந்து கொண்டே மாலைக் கல்லூரி வாயிலாகவும் அஞ்சல் வழிக்கல்வி வாயிலாகவும் பயின்று பெற்றார்.

ஒளவை அவர்கள் தமிழ் இலக்கிய நூல்களைப் பற்றிப் பேசுவதைப் போன்றேஇ விருப்பமும் ஈடுபாடும் உடையவர்களிடம் ஆங்கில இலக்கியங்கள் பற்றிஇ சேக்ஸ்பியர்இ சார்லஸ் டிக்கன்ஸ்இ தாமஸ் ஹார்டி ஆகியோரின் நாடகங்களைஇ நாவல்களைப்பற்றிப் பேசுவார். பணி நிமித்தம் அவரைக்காணச் செல்லும் போதெல்லாம் இங்ஙனம் நிகழும். அப்போது வெளியிலிருந்து அவரைக்காண வந்த பேராசிரியர்களும் இலக்கிய ஆர்வலர்களும் உடன் இருப்பார்கள்.கள் அன்பால் அரவணைத்துப் பலரையும் கட்டிப் போடும் திறனும் ஆற்றலும் உடையவர். நாள்தோறும் புதிதாகச் சிந்திப்பவர்; புதிய நூல்களைப் படித்துக் கொண்டேயிருப்பவர். புதிய சிந்தனையுடைய இளைஞர் குழாத்தினைச் சுற்றமாகச சுற்றிக் கொள்ளும் இயல்பினர். யாரிடத்தும் கடுஞ்சினம் கொள்ளுதலும் முரண்படுதலும் இல்லாதவர். முரண்பட்டிருப்பவர்களையும் ஒதுக்கித்தள்ளாதவர். தமிழ் இலக்கியப் பேராறு; ஆங்கிலச் சொல்லருவி; காப்பியக் கொண்டல்; உரைநடைத் தென்றல். அவருடைய பல்வகை மக்கள்;தொடர்பு ஆற்றல்கள் விரிப்பிற் பெருகும் என அஞ்சுகிறேன். இப்பெருமகனார் நல்ல உடல் நலத்துடனும் சிறப்பான உள நலத்துடனும் நீண்டகாலம் வாழ்ந்து தமிழ்த் தொண்டாற்றி வர வேண்டும் என்று வாழ்த்தி வணங்கி என்னுரையை நிறைவு செய்கிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *