வாழ்க்கை என்பது இயற்கையாக மானுடப் பிறவிக்கு வாய்த்த ஒரு வரம் என்பார்கள்.மனிதப் பிறவியும் வேண்டுவது இம் மாநிலத்தே என்பது தேவாரத் திருமறையாகும்.
புளியங்காய் பறந்த நிலையிலேயே ஓடு ஒட்டியே இருக்கும். அது கனியக் கனிய ஒட்டுறவு இன்றி அதன் ஓடு தனியே கழன்றுவிடும். அதுபோல வாழ்வு நிலை கனியக் கனிய மிகச் சீறிய மேண்மையுடைய சிலர் மட்டுமே ஓடு கழறும் உயர்வினைப் பெறுவார்கள்.
அந்த நிலையைத்தான் துறவு என்றும், பக்தி வைராக்கிய ஞானம் என்றும் பெரியோர் கூறுவார்.

Add a Comment