கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல், நாடுவிட்டு நாடு பெயர்தல், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழிக்கு ஆக்கமூட்டுதல் வெற்றிகரமாக நடந்துவருகிறது.
ஒரு காலத்தில் உழைப்பதற்கும் பிழைப்பதற்கும் வேறு வழியில்லாமல் திரைகடல் ஓடி திரவியம் தேடினார்களோ இல்லையோ, தேம்பிக் கிடந்தார்கள் நம்முடைய மக்கள்
இப்போது கல்வி, வணிகம், பண்பாட்டு பரிமாற்றம், தொழில் நுணுக்கம், அதிகாரப் பதவிகள் போன்ற உயர்வான வாய்ப்புக்களை வளர்த்துக்கொள்வதற்கு நம்முடைய மக்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வருகிறார்கள்.
நேற்று முன்னாள் சென்னையில் பேசிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத் துணைவேந்தர் இந்தியர்களுடைய அறிவாற்றலும் உழைப்புத் திறனும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு வலுச் சேர்க்கின்றன என்று சொல்லி இளைஞர்களை வரவேற்றிருக்கிறார்.

Add a Comment