POST: 2012-03-28T14:48:01+05:30

முருகப் பக்தியின் விளைவாக தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 55 லட்சம் முட்டைகள் விற்பனை என்று வானை முட்டியிருக்கிறது.

உருவாவதற்கு முன்னும் உருவான பின்னும் உணவாகும் தகுதி கோழிக்கே உண்டு.

மரக்கறி உணவை ஊக்குவிக்கும் வழக்கம் குஜராத் மாநிலத்தில் உள்ளது.

புலால் உண்ணாமை என்ற அதிகாரத்தை எழுதிய திருவள்ளுவர் சிலையைச் சுற்றி மீனவர்களை வலை வீசுவதை என்னவென்று சொல்வது?
திருவள்ளுவர் கல்லாய் நின்றதற்கு அதுவே ஒரு காரணமாகும். எதிரே உள்ள விவேகானந்தருக்கு மீன் வறுவல்தான் விருப்ப உணவாகும்.

காலத்தின் கோலம் இந்த அழகில் ஓராண்டிற்கு முட்டை உணவு 180 என்ற அளவில் அமைய வேண்டுமாம். ஆனால் 50க்கு மேல் உண்ண தமிழர்களுக்கு வழியில்லை என்று மச்சாவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் இந்து செய்தித்தாள் எழுதியிருக்கிறது.

புரட்டாசித் திங்களிலும் ஐயப்பன் விழாவிலும் இந்த முட்டை உண்ணும் பழக்கம் 25 சதவீதம் குறைவதாகவும், அதனால் வருத்தப்படாமல் பிற மாதங்களில் அதனை ஈடுகட்டிவிடுவதாகவும் சொல்கிறார்கள்!!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *