தமிழ் இலக்கியங்களை எல்லாம் பிழிந்தால், பக்திச் சுவை சொட்டும் என்று நினைக்கத்தக்க அளவுக்கு சைவ, வைஷ்ணவ தத்துவ புராண இதிகாச ஞான நூல்கள் ஏராளமாக இருக்கின்றன.
பகவத் புராணத்தில் பக்தி என்ற பெண் குழந்தை தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து மராட்டியத்தில் மங்கையாகி, குஜராத்தில் கிழவியானாள் என்று ஒரு வரி உண்டு. இது ஏறத்தாழ வைஷ்ணவம் நெல்லையில் இருந்து துவாரகை வரை வளர்ந்ததைக் காட்டுவதாகும்.
வைஷ்ணவம் ஒரு தொன்மையான சமயமாகவும் திருமாலைத் தலைவராகவும் கொண்ட பெருமையுடையது

Add a Comment