POST: 2012-04-24T16:10:33+05:30

அந்தமான் நிகோபாரின் பழமையை இலக்கியம் காட்டும் தொடர்களையோ ஒலி ஒப்புமையமைந்த சொற்களையோ வைத்து வரலாற்றைக் காண்பதில் இடர்கள் பலவுண்டு.

பிற்காலச் சோழர்களின் வெற்றியைப் பேசும் கல்வெட்டுக்கள், நக்கவாரம் என்று இப்பகுதியைக் குறிப்பிடுகின்றன.

மணி மேகலையில் நக்கசாரணர், நாகர், வாழ்மலை என்று குறிப்பிடும் பகுதியும் இதுவே ஆகலாம். நக்கம் என்றால் அம்மணம் என்று பொருள், இங்கு வாழும் மக்கள் பெரும்பாலோர் அண்மைக்காலம் வரை உடுப்பாடையின்றி வாழ்கின்றனர்.

Marco Polo இம்மக்களை நிர்வாணமாக உள்ளவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *