சைவ சித்தாந்த ஞானக்களஞ்சியம் என்ற புகழோடும் தாங்க முடியாத நோயோடும் நொடியோடும் வாழந்த
புலவர் அமிர்தலிங்கனார் காஞ்சிபுரத்தில் நேற்று காலமானார்.
தவத்திரு அழகரடிகளின் மாணவர், திருவாவடுதுறை பெரும்புலவர், காஞ்சிபுர பச்சையப்பர் கல்லூரி பேராசிரியர் அமுத இளவழகனாரின் தந்தையார்.
நான் இளம் பருவத்திலேயே புலவர் அமுதலிங்கனார் அவர்களை கண்டு சில வேளைகளில் எனக்கும் தமிழும் கற்றுத்தந்தார்.என்னுடைய தந்தையாருக்கு
நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார்.
இலக்கியம் இலக்கணம் எழுத்தெண்ணிக்கற்ற புலவர் அமிர்தலிங்கனார் சைவசித்தாந்தத்தை அறிவார்ந்த
நெறியில் அணுகியவர் .
எளிமையான உயர் நிலைப்பள்ளி தமிழாசிரியராக வாழந்த அவர் வாழ்வு சோர்ந்து முடிந்தது. இந்த கனிமரத்திற்கு விருதுகள் பரிசுகள் கண்ணில் படவில்லை.
நெடிய தோற்றமும் வேட்டி மேல் துண்டும் அணிந்தபடி உலா வந்த பெரும்புலவரின் தோற்றம் என் கண்ணில் நிற்கிறது

Add a Comment