POST: 2012-05-09T12:22:49+05:30

ஆதினம் என்றால் அகப்பட்டதை சுருட்டுவது என்பது பொருள்.
சுய ஆதினம் – தானாக எடுத்தல்
பர ஆதினம் – பிறருக்குத் தருதல்
அது போலத்தான் மடம் என்ற சொல்லுக்கு முட்டாள்தனம் என்பது தமிழ்.
தமிழிலில் எழுதும்பொழுது மடத்தலைவர் என்றுதான் எழுத வேண்டும்.

குடிக்கவும் நீரற்றிருக்கும் – ஏழைக் கூட்டத்தை எண்ணாமல், கொடுந்தடியர்க்கு மடங்கட்டி வைத்ததினாலே – தம்பி!
வசம்கெட்டுப் போனது நமது நன்னாடு!
என்பது புரட்சிக்கவிஞரின் வாழ்வில்
உயர்வுகொள் என்று 1938ல் எழுதிய பாடல் வரிகளின் வாக்காகும்.

ஆதினச் சேற்றை கிளறினால் ஆபாச நண்டுகளும், அலங்கோல நத்தைகள்தான் கிடைக்கும்.

திருஞானசம்பந்தர் சமணர்களை கழுவேற்றினாராம்.
இப்போது சமண வடிவிலுள்ள நித்தம் தவம் செய்யும் கோலத்தில் பசும்பொன் ஆபரணங்களை அணிந்தவர்,
திருஞானசம்பந்தர் அருளிய மடத்தை கழுவேற்றப் போகிறார் என்று சங்கர மடம் சொல்லுகிறது.

சங்கரராமன் ஆவி ஒரு மடத்தையும் விடாது போலிருக்கிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *