மொழியென்பது பேசும் மக்கள் வாழும் நிலத்தின் தட்ப வெப்ப நிலைகளால் ஒலிமாற்றம் பெறும்.
இளம்பருவத்திலேயே ஒலிப்புப்பயிற்சியை ஒழுங்குற கற்றுத்தர வேண்டுமென்று ஆங்கில ஆசிரியர்கள் வலியுறுத்துவார்கள்.இதனை Enunciation and Pronunication என்பார்கள்.
சோழ நாட்டில் ழ கர ஒலிப்பு சீர்குலைந்ததைக்காணலாம்.இதனாலேயே பாண்டிய நின் நாடுடைத்து நல்லத்தமிழ் என்றத் தொடர்
பிறந்ததோ?
நெருங்கியப்பழக்கத்தால் நையாண்டிக்குரலால் எவே,ஏம்மா,ஏன்ப்பா,இங்க,ஏனுங்க என்ற ஒலிப்புகள் பிறந்திருக்கலாம்.
பக்கத்தில் இருக்கும் கேரளக்காரர்கள் ஆங்கிலத்திலுள்ள R ஐ வல்லினமாக ஒலிப்பதும் அகரத்தை ஒகரமாகவும்,ஈழத்தமிழர்கள் அகரத்தை ஒகரமாகவும் ஒலிப்பதைக்காணலாம்.ஆனால் எழுத்துத்தமிழ் வேறுபடுவதில்லை.வழக்குத்தமிழ் மாவட்டம்தோறும் வேறுப்பட்டது.வட்டார ஒலிப்பைக்குறைத்து சீரான மொழி வழக்கை அமைப்பதைத்தான் கட்டளைத்தமிழ் என்றார்கள்.
காஞ்சியில் பிறந்தவர் தென் குமரிவரையிலும்
தனது நடையிலேயே பேசினார்.எந்த மாவட்டத்தினரும் விளங்கவில்லை என்று சொல்லவில்லை.ஆனால் ஏதோ சிக்கலினால் வட்டாரத்தமிழில் கதைகளை எழுதி பேசுவது போல் சொற்களை எழுதலாம் என்று
சிறுகதையாளர்கள் சிந்தித்தனர்.வர வர அந்தக்கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆகியிருக்கிறது.
இதே நிலை தான் ஆங்கிலம் பேசும்
ஆஸ்திரேலியா,கனடா,அமெரிக்க நாடுகளிலும் இங்கிலாந்து எல்லையிலேயே இரீஷ்,ஸ்காட்,வெல்ஷ் ஆகியோரின் ஒலிப்புக்களைப்பற்றி பலர் கூறினாலும் மில்டன்,ஷேக்ஸ்பியர் மேலோங்கியே நிற்கிறார்கள்!

Add a Comment