ஒரு சொல் எந்தப்பொருளை எவ்வாறு வழங்குகிறது என ஆராய்வது கற்றோர் கடனாகும்.
இந்நெறியைத் தொல்காப்பியம் நோக்கு என்று மொழியும்.ஆதலின் நோக்கு என்பது கண் பார்வையில் படும் வெறும் சொல்லன்று.மனப்பார்வையில் படும் நுண்மை உடையதாகும்.
கேட்பார் மறித்து நோக்கிப் பயன் கொள்ளும் கருவி என்று உரையாசிரியராகிய பேராசிரியர் எழுதினார்.
இந்நிலையில் மறித்து மறித்துத் தானே வினவிக்கொண்டால்தான் சொல்லியான் நெஞ்சம் வெளிப்படும் என்று வ.சுப.மா விளக்கினார்
வெளிப்பட்ட சொல்லை ஓர் ஆசிரியன் போல் கருதி வினவி வினவித் தன் நினைவுக்கருவி கொண்டு அவன் நினைவுப் பொருளைக்கல்லி எடுக்க வேண்டும்.

Add a Comment