முதல் மொழிப்பல்கலைக்கழகம்
இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் குடியரசுத்தலைவர் டாக்டர் ச ராதாகிருஷ்ணன் பாட்டியாலா மாநகரில் பஞ்சாபி பல்கலைக்கழகம்
ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார்(24.6.1962)
பஞ்சாப் மாநிலத்தில் வேறு பல்கலைக்கழங்கள் இருந்த நிலையில் பஞ்சாபி பல்கலைக்கழகம் என்று பெயரிட்டார்கள் போலத்தெரிகிறது.
பஞ்சாபி என்பது மொழியின் பெயர்,ஒரு மாநில மொழியின் பெயரால் ஒரு பல்கலைக்கழகம் தொடங்குவது புதுமை என்றாலும் மொழியுணர்வு பின்னாளில் பூசலக்கு இடம் தரக்கூடாது.குறுகிய நோக்குகளுக்கும் மொழி உயர்வு என்ற முரண்களுக்கும் வாய்ப்பினைத் தந்து இன்னொரு கலகத்திற்கு இடம் தரக்கூடாது என்று டாக்டர் ச ராதாகிருஷ்ணன் வலியுறுத்திருக்கிறார்.பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொழில் நுணுக்கப்பாடங்களையும் கற்றுத்தர வேண்டும் என்றும்,கல்வி நிலையங்களில் அரசியல் சாதி சமயக்கறைகள் படரக்கூடாது என்று தலைப்பாகைத்தலைவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழ்ப்பல்கலைக்கழகம் தொடங்கி 31 ஆண்டுகள் ஆகின்றன.தமிழோடு அளாவிய துறைகள் மட்டுமே
தொடங்கப்பட்டன.

Add a Comment