POST: 2012-07-23T13:10:36+05:30

படியாய்க்கிடந்து உன் பவள வாய்க்காணும் பதம் கேட்டார் ஆழ்வார்!

குதிரையாய்ப்பிறந்து குடியரசுத்தலைவர் அணிவகுப்பில் நிற்க ஆசைப்பட்டாராம்!!

இன்றோ குடியரசுத்தலைவராகவே பதவி ஏற்கிறார்.மூச்சும் பேச்சும் உழைப்பாய் வாழும் முகர்ஜி கோமான்!

ஏழு என்ற எண்னை நம்பி தோற்றவரும் எட்டு என்ற எண்னை நம்பி வெற்றிப்பெற்றவரும் பதிமூன்று என்ற எண்ணால் இன்று பதவி பெறுபவரும் பார்த்தால் எண்ணில் என்னடா இருக்கிறது? எண்ணத்தில் எல்லாம் உள்ளது.

எண்னை நம்பி இனியேனும் பாழாகாமல் உழைப்பை நம்பி ஊக்கம் பெறுக என்று தான் ஆரூடக்கூட்டத்தை பார்த்து அழ வேண்டியிருக்கிறது….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *