எந்த ஓலைச்சுவடியும் பதனப்பெட்டியில் பாதுகாத்தாலும் ஐம்பது ஆண்டுகளுக்குள் எழுத்துக்கள் அழியும்.அச்சு நூல்களுக்கே இந்த அவலம் தான்
குல்லாய் போடாத கலாம் திருவள்ளுவர் எழுதிய மூல ஓலைச்சுவடி கிடைக்குமா
என்று கேட்ட போது ஆளுநர் மாளிகையில் அனைவரும் கை தட்டினார்கள்,அறிவியல் அறிஞர் அப்துல்லாவின் அறியாமைக்கண்டு!ஈராயிரம் ஆண்டுகள் கழித்தப்பிறகு அவர் எழுதிய ஏடு இருக்குமா ?
தில்லியில் சாந்தினி சௌக் என்ற இடத்தில சிறு பையன் நின்றுக்கொண்டு அவன் வீட்டு வாழக்காய் வெட்டும் கத்தியைக்காட்டி இது மராட்டிய வீரன் சிவாஜியின் கத்தி,பத்து ரூபாய் தாருங்கள் என்று இன்றும் கேட்பான்.
அதே நிலையில் குறுந்தொகையின் மூல ஓலைச்சுவடி கிடைத்தாக ஒருவரும் சுந்தரர்க்கு எதிரில் கிழித்துப்போட்ட ஓலைச்சுவடி கைலாசத்தில் கிடைத்திருப்பதாகவும் கதை கட்டினால் கேட்பதற்கு பலர் தமிழகத்தில் இருக்கிறார்கள்.
இதுவரை பொய்கள் கதைகளில் உலவின.
நண்பர்களால் கணிப்பொறியிலும் உலவத் தொடங்கி விட்டன…..

Add a Comment