சிலப்பதிகாரம் 1892 ஆண்டு வெளிவந்தது.
முதற்பதிப்பின் பரிசோதனைக்குக்கிடைத்த கையெழுத்துப்பிரதிகளின் விவரம் என்று 14 பிரதிகளை டாக்டர் உ வே சா குறித்திருக்கிறார்.
இதனால் ஓலைச்சுவடி எழுதும் பழக்கம் அப்போதே இல்லை என்று புலானகிறது அல்லவா?
மேற்கூறிய பழையப்பிரதிகளுள் பல இனி வளுப்பட வேண்டும் என்பதற்கு இடமில்லாமல் பிழைப்பொதிந்து,அநேக வருடங்களாக தம்மை படிப்போரும்,படிப்பிப்போரும் இல்லை என்பதையும் நூல்களை பெயர்த்து எழுதி தொகுத்து வைத்தலே விரதமாக கொண்ட சில புண்ணியசாலிகளை தாம் உருக்கொண்டு இருத்தலையும்
நன்கு புலப்படுத்தி ஒன்றோடு ஒன்று ஒவ்வாது பிறழந்து,குறைவுற்றுப்,பளுதுபட்டுப்,பொருள் தொடர்பின்றிக்கிடந்த இப்பிரதிகளை பரிசோதித்த துன்பத்தை உள்ளுங்கால் உள்ளம் உருகும் என்று தமிழ்த்தாத்தாவின் வரிகள் நம் கண்களில் நீர் பெருக எழுதியிருக்கிறார்.
வேலையற்றவர்கள் ஓலைச்சுவடி தேடுவதாக பேசிவருவது நமக்கு நாணம் தருகிறது. வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபிரீதக்குறிகள்.வேந்தே!இதுதான் காலக்குறி!! என்பது பேரறிஞர் அண்ணாவின் வைர வரிகளாகும்….

Add a Comment