அசைந்து அசைந்து தமிழக அரசின் ஆட்சித்தேர் 4.2 இலட்சம் பக்கங்களைக்கொண்ட நூற்றாண்டு பழமையுடைய அறிக்கை,அறிவிக்கை,சட்டம்,
சட்ட விதிகள்,ஆணகளை
தமிழ் மொழிப்பெயர்ப்பையும் இணைத்துக்கொண்டு கணிப்பொறியில் எண்மியப்படுத்தக்கருதியுள்ளனர்.
பாறை,ஓலை,பழந்தாள்,கையச்சு போன்ற
கிழச்சாதனங்கள் முடங்கி விட்டன என்று அறியலாம்.இது தான் அறிவியலின் வளர்ச்சி!
மாவட்ட ஆட்சித் தலைவர்களாக இருந்த வெள்ளையர்கள் வேனிலில் குறிஞ்சி நகரங்களுக்குச்சென்று தான் பொறுப்பேற்ற மாவட்டத்தின் மக்கள்,மரஞ்செடிகொடிகள்,விலங்குகள்,
பழக்கவழக்கங்கள்,பண்பாட்டுச்சுவடுகள் என்றெல்லாம் அகர முதல் ன கர இறுவாயாக எழுதியிருக்கிறார்கள்.
மணிவாசகர் காலத்தைக்கூட அந்நாளைய மதுரை நகர ஆங்கிலயே ஆட்சித்தலைவர் ஆராய்ந்தார்.இப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாவாட்டும் பணியாளர்களாக மாறிவிட்டார்கள் என்று விடுதலை பெற்று பத்தாண்டுகளுக்கு பிறகு நேரு பெருமகனார் கடிந்து எழுதினார்….

Add a Comment