POST: 2012-08-11T18:00:18+05:30

எதுவரைக்கும் தமிழறிஞன் இந்த நாளில்
ஏற்றம்மிகக் கொண்டிடுவான் என்று கேட்டால்
இதுவரைக்கும் என்றெடுத்துக்காட்ட இங்கே
இவரைத்தான் நான் சுட்டிக்காட்டுகின்றேன்!
மதுசுரக்கும் தமிழ்ப்பேச்சால் மதியின் மாண்பால்
மணிதெறிக்கும் உரை வீச்சால் தேன்கனிந்த
அதிமதுரக் கனிபோலப் பழகும் இந்த
ஔவை நடராசன் தான் வாழ்க வாழ்க!
-உவமைக்கவிஞர் சுரதா

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *