அறிஞர்கள் படும் அவலம்
அறிஞர்கள் தளர்ந்த நிலையில் எவ்வளவு செல்வமும்,தொண்டர்கள் பின்னணி இருந்தாலும்,எவராவது ஒரு பதிப்பாளர் தம் எழுத்தை வெளியிடுவார்களா,எவரேனும் துணை நிற்க மாட்டார்களா என்ற ஏக்கத்தில் ஊசாலடி உயிர் விடுவார்கள்
சிலம்புச்செல்வர், உரைவேந்தர் ஔவை, திரு வி க, அறிஞர் தெ பொ மீ இவர்கள் பட்ட அவலத்தை தெரிந்த சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன்
நான் நலிவாக இருக்கிறேன்,நான் எழுதிய
புத்தரும் தம்மபதம் என்ற நூலினை வடிவாக்கி வைத்திருக்கிறேன்.ரூபாய் 20,000 நிதயுதவி கிடைத்தால் அதனை 2500 ஆம் ஆண்டு விழாவினை புத்தர் புனித நாளாக தில்லி மாநகரில் கொண்டாட பெருங்குழு அமைக்கப்பட்டுள்ளது.
விழாத்தொடர்பான அச்சு செலவினத்திற்கு ஒதுக்கி இருக்கும் தொகையில் ரூபாய் 20,000யிரத்தை எனக்கு வழங்க வேண்டுகிறேன் என்று பாரதப் பிரதமர் நேரு பெருமகனுக்கு இந்திய அரசின் சட்ட அமைச்சராகவும்,அரசமைப்பு சட்டத் தந்தையராகவும் திகழந்த அறிவுத்திலகம் அண்ணல் அம்பேத்கர் கடிதம் எழுதினாராம்.
என்னைக்கேட்பதை விட விழாக்குழுத்தலைவரும்,குடியரசுத் துணைத்தலைவருமாகிய
டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐ அணுகுமாறு எழுதியதோடு எப்படி நூல்களை விற்பது என்று அவரை இழிவுப்படுத்தும் நிலையில் நீங்களே அச்சடித்து ஒரு புத்தகக்கடையை விழாவின் போது திறந்து வைத்து நீங்கள் அமர்ந்தால் அயல் நாட்டுக்காரர்கள் வாங்கலாம் என்று எழுதினாராம்
வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல வேதாந்தத்திலகம் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்னால் உதவ முடியாது என்றாராம்.
வேதிய மாமணி புத்தர் கொள்கையே இந்து மதத்தின் இன்னொரு கிளையென வெறுப்போடு விரிவுரை செய்பவராம்.
மூன்று மாதத்திற்கு பிறகு நூல் வடிவத்தைக்காணாமலேயே அண்ணல் அம்பேத்கர் வேதனை மனத்தோடு உயிர் வாழ்க்கையிலிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
இப்படி கேட்பானனேன்?இழிவை ஏற்பது ஏன்? என்று அண்ணலை யார் கேட்க முடிந்தது.
20,000 தொண்டர்கள் ஒரு ரூபாய் தர முன்வந்தால் கிடைத்திருக்காதா?

Add a Comment