POST: 2012-10-09T22:03:43+05:30

அமெரிக்கா நாட்டில் வாழும் ஈழத்தமிழர் தன் மனைவியோடு தமிழகத்திற்கு வந்தார்.

அவருடைய மாமனார் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேரம்பலம் ஆவார்.

தேன் போல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அம்பலம் ஆங்கிலத்திலிருந்து பால் போல் அரிய வரலாற்று நூல்களை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

Budget என்பதை வரவு செலவுத்திட்டம் என்பதை விட பாதீடு என்ற புறப்பொருள் வெண்பாச்சொல்லை நீங்கள் புகுத்தலாகாதா என்று என் தந்தையாரை கேட்டாராம்.

ஈழத்தமிழர்களுக்கு இனவுணர்வும்,மொழிக்காதலும் பெரியதாயிற்றே,உங்கள் குழந்தை தமிழ் பேசுவாளா என்று பேரம்பலம் மருகனிடம் கேட்டேன்.அழுத்தம் திருத்தமாக இல்லை என்று சொன்னார்.

நீங்கள் நினைப்பது போல கனடாவில் எங்கும் கடை பரப்பி வாழும் ஈழத் தமிழர்களின் குழந்தைகள் தமிழ்ப்பள்ளிக்குச் செல்லலாம்.திருமுறைகளை
பாடலாம்.

மறந்து விடாதீர்கள்!உறுதியாக அந்தப்பிள்ளைகள் 15 ஆண்டுகள் கழித்ததும் தாம் கற்ற தமிழையும்,படித்த பரதத்தையும் மறந்து
விடுவார்கள்.

சுற்றி வாழும் சூழலின் துகளில் இருந்து தான் எதையும் எவரும் கற்றுக்கொள்ள முடியும் என்று சொன்னார்….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *