இன்று மாலை ஆந்திர வளாகத்தில்(Andhra Club)கணித்தமிழ்ச்சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
தமிழ் இணையக்கல்விக்கழகத்தின் இயக்குனர்களான பொறிஞர் பொன்னவைகோ,பொறிஞர் சங்கரநாராயணன் அவர்களோடு இந்நாளைய இயக்குனர் பொறிஞர் நக்கீரன் கணித்தமிழ்ச்சங்கத்தின் இலக்கு,நோக்கு எவ்வாறு இருக்க வேண்டும் என்று நுட்பமாக உரையாற்றினார்கள்.
அவர்களின் உரையில் தமிழில் நிரலிகளின்(Softwares) எண்ணிக்கை எவ்வளவு குறைவாக உள்ளது,கணினியில் தமிழ் வளர்ச்சி ஏன் இன்னும் எட்ட வேண்டிய இலக்கை அடைய முடியாமல் தத்தளிக்கிறது என்று கடந்த 13 ஆண்டுகளின் நடந்த கதை வேல் பாய்ச்சியது.
இனி ஒரு விதி செய்வோம் என்பதை விட சதியில்லாமல் எப்படி மதியுடன் பணியாற்றுவது என்பது தான் இனி நாம் சிந்திக்க வேண்டும் என்பது உரையின் வலியுறுத்தலாக அமைந்தது…

Add a Comment