ஆசிய நாடுகளான சீனம்,ஜப்பான், பிலிப்பைன்சு,இந்தோனேசியா,இந்தியா ஆகிய நாடுகளின் பெயர்கள் எல்லாம் ஆங்கில ஆட்சியனரால் சூட்டப்பட்டன.ஆனால் பர்மா நாட்டை படைத்துறையினர் கைப்பற்றியப்பிறகு மக்கள் வழக்கில் இருந்த இலக்கியப்பெயர் என்று காரணம் காட்டி பர்மாவை மியான்மர் என்று 1988 ல் மாற்றி விட்டார்கள்.
எல்லா இனத்தவரும் சுட்டுகிற பொதுப்பெயர் என்று காரணம் கூறினாலும் பர்மியர் இனத்தவர் வாழந்த நாடு பர்மா என்று ஆங்கிலயே ஆட்சியினர் அழைத்ததில் எனக்கு குறையேதும் தெரியாததனால் நான் பர்மா என்றே குறிப்பிடுவேன்.இது கூட பரவாயில்லை மியான்மர் என்ற பெயர் பொருத்தமாயிற்று என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.ஆரூடத்தை நம்புகிற மடமை படைத்தலைவர்களுக்கும் இருந்ததில் எனக்கு மனம் வருந்துகிறது என்று விடுதலை வீராங்கனை
ஆங் சான் சூச்சி கருத்துரைத்துள்ளார்.
இலக்கியப்பெயர் என்ற போதில் நமக்கு
தலை அசைகிறது. ஆரூடக்கணக்கில் பெயர் மாற்றினார்கள் என்று சொல்லும் போது நமக்கு கசக்கிறது!
தமிழ் நாடு என்பது இலக்கியப்பெயர் என்னும் போது இனிக்கிறது. 5 எழுத்து என்பது தான் இதன் பின்னணி என்று ஆரூடக்காரன் சொன்னால் வயிறு எரிகிறது!!

Add a Comment