POST: 2012-11-22T08:36:44+05:30

பாட்டும் தொகையும் எனப் பாராட்டப்பெறும் பழங்கருவூலங்களாகிய தொகை நூல்களுள் பொலிவாலும் அளவாலும் புலமையாலும் புனைதிற வளமையாலும் புகழோங்கிய சான்றோர் செய்யுள்கள் அடங்கிய நற்றிணை இயல்பாகவே அடையேதும் பெறாமல் முதன்மை நிலையில் நல் என்னும் புகழ்ச்சொல் ஏந்திய பெருமிதம் பூண்டதாகும்.

குறுகிய அளவுடைய பாடல்களைக் குறுந்தொகை என்றும் நெடிய பாடல்களை நெடுந்தொகை என்றும் குறித்த பெருமக்கள் அளவு குறித்த சொல்லாகவே நல் என்பதை இணைத்துக் கருதினார்கள்போலும்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *