இலக்கியம் தன் சீரிளமைத் திறம் குன்றாமல் சிறப்புற்றுத் திகழ்வதற்கு மக்களும் இயற்கைப் பொருள்களும் தலைமையிடம் பெறுகின்றன.
இயற்கையை விடுத்து மக்களையோ, மக்களை நீக்கி இயற்கையையோ புலவர்கள் புனைந்தால் அப்பாடல் குறையுடைவதாகவே அமையும்.
முதற்பொருளாக மக்களையும் துணைப்பொருளாக இயற்கையையும் சங்கச் சான்றோர் அழகுறக் காட்டியுள்ளனர்.

Add a Comment