POST: 2012-12-30T23:56:52+05:30

பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய பழுத்தப்புலமையும் நாடக இலக்கியத்தில் தோய்ந்த பெருமிதமும் கொண்டு அடக்கத்தோடு வாழ்ந்து இன்று அடங்கி விட்டார் பேராசிரியர் முனைவர்
இரா குமரவேலன்.

திருக்குறள் வ ஊ சிதம்பரனார் உரையை
வனப்புற வெளியிட்ட அழகும், கடைசி மூச்சு நிற்கும் போது சாகித்ய அகாதமி வெளியிட்ட ஒரிய மொழி சிறுகதை தொகுப்பு கனவுகள் என்ற நூல் ஈரம் காயாமல் இருந்தது.எழுதி முடித்த இரண்டு நூல் அச்சில் உள்ளன.

ஆன்று அவிந்து அடங்கிய சீர்திருத்தக் கொள்கைச்
சான்றோராகிய முனைவர் குமரவேலர் தந்தை நூலகராகவும் தாயோ அதிகாரிகள் அடங்கிய குடும்பத்தைச் சார்ந்தவர்.உரைவேந்தர் ஔவை துரைசாமியின் மாப்பிள்ளை ஆவார். ஆமாம் அவர் எனக்கு மாமன்.

தமிழ்,ஆங்கிலம்,பிரெஞ்சு,செருமானியம் மொழிகள் தெரிந்தவர்.தட்டி தட்டி நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு முனைவர் பட்டம் பெற்றுத்தந்தவர்.

அவர் அடிக்கடி சொல்வது எனக்கு இரண்டு கை;
இரண்டு பேருமே மகளிர் மருத்துவர் புன்னகை, பரிவு தரும் மல்லிகை என்று மகன் இனியவனோடு சேர்த்துச்சொல்வார்.

அன்னோனை இழந்த இவ்வுலகம்
என்னாவது கொல்? அளியது தானே!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *