தொடக்கப்பள்ளியில் இடம் பிடிப்பதற்காக பை நிறையத்தொகை எடுத்துக்கொண்டு காத்திருக்கிறார்கள்.பள்ளிகள் பணம் பறிப்பதையே ஒரு தொழிலாக கொண்டிருக்கிறார்கள்.இந்த அழகில் அரசுப்பள்ளிகளில் இடம் இலவசம் என்று அறிவிப்பு செய்கிறார்கள்.
பாழாய்ப்போன பள்ளிகளுக்கு பணத்தை கொட்டிக்கொடுக்க முடியாமல் பக்கத்தில் இருப்பவரிடம் கடன் வாங்கி அயல் நாடுகளுக்கு பறந்து போனால் அந்தச்செலவு குறைவு தான்.
மண நாளிலிருந்து மகன் பிறந்தால் மருத்துவம்
சேர்ப்போம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு இடமும் கிடைக்கிறது செலவில்லாமல் வசதியும்
கிடைக்கிறது.
ஆசிரியர்கள் தினம் ஒரு நாளை அறிவித்து ஆசிரியர்களுக்கு பூங்கொத்துக்களை,இனிப்புப்பெட்டிகளை வழங்குகிற காலம் போய் வங்கியின் காசோலைகள்,வானூர்திப்பயணம் என்ற மிகப்பெரிய பரிசுகளை பெறுவதற்கு கை நீட்டிக்காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும் விலையாக பெறும் போது இதற்கும் விலை கொடுங்களேன் என்று கேட்கிறார்கள்.
இது சென்னை ஷெனாய் நகரில் நடக்கிற காட்சிதானே என்று கேட்காதீர்கள்.செங்கொடி பறக்கும் சீனாவில் இந்த லஞ்ச ஊழல் தாண்டவம் நடக்கிறதாம்.
ஒரு குழந்தை பிறந்தால் போதும் என்று ஓதிய சீனாவின் கதி இதுவென்றால் ஒரு குழந்தையும் வேண்டாம் என்ற உபதேசமல்லவா இந்தியாவுக்கு தர வேண்டி வரும்?

Add a Comment