நாளுக்கு நாள் அறிவு வளர்கிறது. வேலைக்கு வேலை சிந்தனை பெருகுகிறது.
கையில் தாளும் எழுதுகோலும் படிப்பதற்கு நூலும் சொல்லிக்கொடுப்பதற்கு ஓர் ஆளும் இன்று அறவே நீங்கிவிட்டுக் கையிலும் பையிலும் கணினி அமர்ந்திருக்கிறது.
ஏனிக் கணினியாக ஏழடி உயரத்தில் தொடங்கி மேசைக்கணினியாக மாறி மடிக்கணினியாக உருவெடுத்து இப்போது மடித்து வைக்கும் கைக்குட்டை அளவுக்கு அணிக்கணினிகள் (ஐபேட்) வந்துள்ளன.
குழந்தைகள் விளையாடுவதற்கு பொம்மைகள் கேட்ட காலம் போய் ஐபேடு 3ஜீ தொலைபேசியும் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.

Add a Comment