POST: 2013-03-15T00:08:24+05:30

ஒரு நூலை அப்படியே பிரதி செய்யக்கூடியவர்கள் இந்நாளில்லை.சுவடியைக்கண்டால் இக்காலத்தில் ஓட்டம் எடுக்கிறார்கள்.அன்புடையவர்களுக்கே அந்த வேலையைச் செய்வது சாத்தியம்.ஒப்பு நோக்கும் போது சரியாக இருக்கிறதா என்று கேட்டால் அன்பில்லாதவர்கள் சரியென்று சொல்லி விடுவார்கள்.1927ல் தமிழ்க்கடல் உ வே சா கூறியது.

இப்போது முதுகலை தான் தகுதியேத்தவிர அன்பு இருக்கிறதா என்று எப்படிக்கேட்பது? இந்த அழகில் சுவடியியல் என்றேத்துறைகள் சில நிறுவனங்களில் பல்லாண்டுகளாக இருக்கின்றன.

இருந்தமிழே உன்னால் இடர்ப்படுகின்றேன்
பொருந்தும் வழியின்றி புலம்புகின்றேன்
என்றல்லவா இப்போது இளைஞர்கள் வெதும்புகிறார்கள்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *