POST: 2013-04-03T16:48:22+05:30

மீண்டும் மீண்டும் நான் சொல்வது தமிழ்ச்சொற்கள் மூன்றெழுத்தில் முடிய வேண்டும்.பல்லாயிரத்தில் ஒரு சொல் தான் நான்கெழுத்தில் வரும்.இனிய ஒலி நயமுடைய எழிலார்ந்த சொற்களை தெரிவு செய்ய வேண்டும்.

உலங்கூர்தி(Helicopter) என்பதை நெல்லை சு முத்து அவர்கள் திறுகூர்தி என்கிறார்கள்.

திகிரி என்றால் போதும் என்று இளமுருகனார் சொல்கிறார்

சிவிவூர்தி,சுழலி ஊர்தி என்ற சொல்வழக்கமுண்டு.

உலங்கு என்பது நான்கெழுத்து தமிழ் மீது கசப்பு வளர்வது இவ்வாறு தரக்கூடாது என்பதனால் சீன சொற்கள் எல்லாவற்றையும் இரண்டு அசைகளுக்கு மேல் வாராமல் காக்க வேண்டுமென்று என்று பேரறிஞர் இலின் யு தாங்கு வருந்தினார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *