செயலாளர் அறையில் பாம்பு படமெடுத்து ஆடுவதாக கண்ணாடி போட்ட பீசி தீப்தி கதறினாள்.உடனடியாக துணைச்செயலாளர்க்கு போன் செய்தார்கள்.அவர் சார்புச்செயலாளரிடம் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.இதற்கிடையில் கட்டடப்பிரிவின் பொறியாளர் கோரிக்கை எழுதிக்கொடுக்கச்சொன்னார்கள்.கட்டிடப்பிரிவில் இதற்கு முன்னிகழ்வு இருக்கிறதா என்று கேட்டு பொதுப்பணித் துறையிடம் வினவினார்கள்.
பொதுப்பணித்துறை ஊர்வன முதலிய விலங்கினங்களைப்பற்றி கால் நடைபராமரிப்பிடம் கடிதம் அனுப்பச்சொன்னார்கள்.பாம்பு பிடிக்க டெண்டர் விட்டு தேர்ந்தெடுக்கவேண்டும் என்று கால் நடை பராமரிப்புத்துறை பரிந்துரைத்தது.பாம்பு பிடார்களுக்கு ஆகும் செலவு ரூபாய் 300 ஐ தாண்டுவதால் நிதித் துறையின் இசைவு கேட்டு கோப்பு அனுப்பட்டது.நிதித்துறை இது போன்ற கோப்புக்களை கவனிக்க முடியாது என்று காரணம் சொல்லி திருப்பி அனுப்பப்பட்டது.
செயலாளர் அவசரம் குறிப்பிட்டதால் குறைவான தொகை கேட்ட பாம்பு பிடாரனை அழைத்து வருவதற்கு போக்குவரத்துத்துறையிடமிருந்து வேன் கேட்கப்பட்டது.பாம்பு எங்கோ பதுங்கியிருக்கிறது என்று செயலகத்துறை வேறு பணி செய்யாமல் சோர்ந்து போய் விட்டது.பிறகு ஆடு பாம்பே என்ற இந்திப்பாடலை இசைத்தப்படி ஓர் இசைவாணரை கூப்பிட்டர்கள்
.பிறகு தான் தெரிந்தது அது பாம்பல்ல கிழிந்து போன பையின் அறுந்து போன கயிறு என தெரிந்தது.செயலாளர் கோபத்தோடு இந்த செலவை யார் ஈடுகட்டுவது என்று கண்ணாடி தீப்திக்கு மெமோ குடுத்தார்.கண்ணாடி தீப்தி வெள்ளிகிழமையன்று முதல் மூன்று மாத விடுப்பில் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் பணிகள் மிக விரைவாக செயற்படுகின்றன என்று செயலாளர் பத்திரிகை நிருபர்களிடம் பேட்டி கொடுத்தார்.இது
நடந்தது மத்திய பிரதேசத்தில்.இனிமேல் ஒவ்வரு துறையும் ஒரு பாம்பு பிடாரரை அமர்த்திக்கொள்வதற்கு நிதிச்செயலாளர் இசைவாணை வழங்கினார்

Add a Comment