செம்மொழி மாநாடு நடந்தது.பேருந்துகள் புறப்படுகின்றன -பிரஸ் என்று ஒட்டிய தலைப்பைக்கண்டு முதல் பேருந்து மிடுக்காகச்சென்றது.அடுத்த பேருந்து நகர முடியவில்லை.ஊடகம் என்று எழுதி ஒட்டியிருந்தது.காவல்காரருக்கு விளங்கவில்லை.இதைப்பார்த்து எங்களுக்கு வயிறு எரிந்தது.தமிழ் வேர்களைத்தேடி வந்த எங்களுக்கு அடி மரத்தை வெட்டும் அதிகாரிகளைக்கண்டு அழுதேன்.இவ்வாறு கூறியவர் மலேசியா திருநாட்டின் மாத்தமிழர் இனிக்க இனிக்க இளந்தமிழ் என்ற பெயரைக்கொண்டிருக்கிறார்.
அவர் இளஞ்செழியனோடு இணைந்து இணைய மாநாட்டினை மலேசியாவில் ஆகத்து 15,16,17,18 ம் தேதிகளில் நடத்துகிறார்கள்.
வேர்களுக்கு வெந்நீர் ஊற்றி விட்டு வெளியில் இலைகளுக்கு பன்னீர் தெளிப்பதை தமிழர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.ஆயிரம் அவலங்களில் இதுவும் ஒன்று…

Add a Comment