கனல் தெறிக்கும் வசனங்களை பேசிய கண்ணாம்பா பற்றி கதை கதையாக சொல்வார்கள்.உயரமான கண்ணகி உருட்டும் விழிகளோடு வசனம் பேசினார்.நீண்ட
வசனங்களை தொடர்ந்து பேசி வெற்றிப்பெற்றார்.அதனால் தான் பொறுத்தது போதும் மகனே பொங்கியெழு என்ற வசனத்தை பசுபலேட்டி கண்ணாம்பாவை நடிக்க வைத்தார்கள்
1940 ல் கண்ணாம்பாவிற்கு அறிமுகப்படமான கிருஷ்ணன் தூதுவில் இந்த அம்மையாரின் தமிழ் ஒலிப்பு ஆந்திர ஒலிப்பாக இருந்தது என்பதால் படமே தோற்றது.எண்ணி இரண்டு ஆண்டுகள் கழித்து கண்ணாம்பா நடித்த கண்ணகி படம் கண்ணாம்பாவின் வசன
உச்சரிப்பால் வெற்றிச்சிகரத்தை தொட்டது.
ஒரு மொழியை பழகினால் இரண்டு ஆண்டுகளில் வெற்றி
பெறலாம் என்று தெரிகிறது.
அமைச்சர் சி சுப்ரமணியம்,முன்னாள் குடியரசுத்தலைவர் வேங்கடராமன் இவர்கள் தில்லியில் பல்லாண்டுகள் இருந்தும் இந்தி வரவில்லை.இவர்கள் இருவருக்குமே தமிழே சரியாக வருமா என்பது வேறு கேள்வி.ஆங்கிலம் இவர்களுக்கு மிக எளிதாக வந்தது…

Add a Comment