POST: 2013-05-07T15:49:46+05:30

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் நான் மாநிலக் கல்லூரியில் பயின்றபோது எனக்குப் பெரும் பேறாக வாய்த்த பேராசிரியர் திலகமாவார்.

பகுத்தறிவுச் சிந்தனையும் பரந்த நூலறிவும் சிறந்த ஆங்கில நுணுக்கமும் ஒரு சேரப்பெற்ற எங்கள் பேராசிரியர் தன் தாங்கமுடியாத அவலத்தை மனத்தில் தேக்கிக்கொண்டு அஞ்சாமல் தன் நெஞ்சில் பட்டதை எடுத்துரைக்கும் நேர்மை வாய்ந்தவர்.

நடைமுறை வாழ்வில் நாட்டிலும், அரசிலும், கலை, மொழி, பண்பாட்டுத் துறைகளிலும் படர்கின்ற நலிவுகளைத் சிந்தனைகளை வகுப்பறைகளிலும் எங்களுக்கு வழங்கினார்.

எந்தப் பரிவும் எவர் சொல்லுமில்லாமல் தகுதி, திறமை என்ற இரண்டு சிறகுகளால் கடல்கடந்து பரந்து சென்று அமெரிக்க, மலேசிய, சிங்கப்பூர் நாடுகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பாடங்களையும் வகுப்புக்களையும் வரையறுத்து நடத்தியவர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *