வாழ்க்கை என்பது வையகத்தோடு வாழும் சூழலைப்பொறுத்தது.பனி கொட்டும் எஸ்கிமோகல் கொதிப்பின் குறைவில்லாத அராபிய நாடுகள் இரண்டு நிலைகளில் நிற்கின்றன.
இந்திய நாடு குளிரும் கொதிப்பும் கலந்துள்ள நாடு.காலம் செல்லச்செல்ல பங்குனி,சித்திரை,வைகாசி திங்களில் கொதிப்பின் கொடுமையை எப்படிக்குறைக்கலாம்.இடி மேல் விழுந்தாலும் இந்த மூன்று திங்களிலும் மின்வெட்டே அமையக்கூடாது என்று சிந்திக்கத்தெரியாதவர்கள் தான் அமெரிக்காவிற்கும் அயல் நாடுகளுக்கும் சென்று வாழ்ந்துக்கொண்டு நாசாவில் புதுமைகளைச்செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு கணம் விளக்கு எரியவில்லை என்றால் மன்னிப்பு கேட்கிற நாடுகள் உண்டு.இது பற்றி இசுரேல் நாடுக்காரரிடம்,சப்பான் நாட்டுக்காரர் இடத்திலாவது காலில் விழுந்து காப்பாறுங்கள் என்று கதறலாமா என்று எரிச்சல் தாங்காத ஏழை வீட்டுக்குழந்தை திண்டுகக்கல் தெருவில் நின்று கொண்டு பொறியியல் கல்லூரிக்கு
விண்ணப்பத்திற்கு லஞ்சத்தொகை எவ்வளவு என்று கேட்டு விழித்து கொண்டு நிற்கிறாள்….

Add a Comment