POST: 2015-07-05T12:22:02+05:30

திருவாசக திருமந்திர அறக்கட்டளை ,சன்முக சுந்தரம் கல்வி அறக்கட்டளை சார்பில் வெள்ளி விழா ஆண்டு திருவாசக இரண்டு நாள் மாநாடு சென்னையில் சனிக்கிழமை 4.7.2015 தொடக்க விழாவில் தமிழ்க்கடல் முனைவர் அவ்வை நடராசன் சொற்பொழிவாற்றினார்.உரையின் முக்கிய கூறுகள்…. சில நூல்களை வரிசையாகப் படிக்கலாம் ,சில நூல்களை பின்னிப் பிணைந்து படிக்கலாம்.ஆனால் திருவாசகத்தை எப்படி வேண்டுமானாலும் எண்ணிப் படிக்கலாம் .அதைப் படிக்கும் பொழுது இந்த உடல் பெரிதில்லை என்று மனதில் தோன்றும்.
சமுதாயத்தில் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு கலந்தவர் என் விளங்க வேண்டும் என்று திருவாசகம் கூறும் நற்கருத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.என்னைப் பொருத்தவரை திருவருட்பாவுக்கு உருகா தார் திருவாசகத்துக்கும் உருகார் என்றார் .
.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *