தமிழ் இசைச் சங்கம்
ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108
பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம்
டாக்டர் ஔவை நடராசன் அவர்கள்
துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்.
22 – 12 – 1993
தொடக்கவுரை-20
மூல இசை வடிவம் அல்லது மரபு வழிப்பட்ட இசை வடிவங்கள் இல்லாத நிலையில், சங்க இலக்கியப் பாடல்களான பரிபாடல், புறநானூறு, திருக்குறள் முதலிய பாடல்களுக்குரிய இசையமைத்து, அவொற்றுக்கெனத் தனியிசைமுறையை மீட்டுருவாக்கலாம். பாடல்களில் யாப்பு, சீர் எண்ணிக்கைகளுக்குத் தகுந்த தாளங்கள், பாடல்களின் யாப்புகளுக்கேற்ற இராகம், பாடல்கள் வெளிப்படுத்தும் சுவைகளுக்கேற்ற இராகம் ஆகியவற்றின் துணை கொண்டு இப்பணியை மேற்கொள்ளலாம். இப்பாடல்களையெல்லாம் இசை நிறுவனங்களில் முறையாகப் பயிற்றுவி்கவும் முயலலாம். இசைக் கல்லூரிகளிலும் மன்றங்களிலும் திருமுறை இசையை ஓதுவார்களைக் கொண்டு பயிற்றுவிக்க ஆவன செய்தல் வேண்டும்.
ஆசியப் பேருலகுக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம், திரையிசை வேந்தராகத் திகழும் இசைஞானி இளையராசா அவர்கள் மேலைநாட்டார் வியந்து திகைக்கும் வண்ணம்
‘‘பல்லிய நல்லமைவை’’ (Sympony) அமைத்திருப்பது,
தமிழர் அனைவரும் பெருமிதங்கொள்ளும் தகவுடையது. இவ்வாறு திறங்காட்டும் திரையிசையை நாம் மறந்துவிடலாகாது. திரையிசை வடிவங்களிலும் வண்ணங்களிலும் இலக்கியச் செவ்வியலையும் கலைத்துறையாளர் அரவணைத்துக் கொள்ளவேண்டும்.

Add a Comment