நமது மாபெரும் ஆங்கிலக் கவிஞரும் நாடகாசிரியரு மானவருடைய தோற்றுவாய் அத்தகையது. இங்கே எனது உறுதிமிக்க கருத்து ஒன்றினைப் பதிவு செய்ய விழைகிறேன்.
வில்லியம் சேக்ஸ்பிருடைய ஆக்கங்களாக நிலவுகின்ற கவிதைகளும் நாடகங்களும் உண்மையாகவே ஜான் சேக்ஸ்பியருடைய மகனால் படைக்கப்பட்டவை. ஏன் அவற்றையெல்லாம் இயற்றியவர் அவரில்லை என்று கருதக் கூடாது என்கிற கூற்றினை நிறுவுவதற்கு வலுவான காரணங்கள் எதுவும் இல்லை. மற்றொரு கவிஞராலோ, பல கவிஞர்களாலோ படைக்கப்பட்டனவாக இருக்கக் கூடும் என்கிற கருத்தியலை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் திறனாய்வுத் தளத்திலும் வரலாற்றுப் புலத்திலும் இறுதியில் சொல்லொணா இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு தோல்வியுற்றன.
ஸ்ட்ரேட்ஃபோர்டு ஈன்றெடுத்த நாடகசாரியராலேயே படைக்கப்பட்டவை என்று நேரடியாக ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்தது என முடிவுகட்டப்பட்டது.

Add a Comment