ஸ்ரீராம் நிறுவனம் பாரதி இலக்கிய விழா – 6.2.2016
முனைவர் ஔவை நடராசன் அவர்களின் வரவேற்புரை-2
இந்த விழாவுக்கு தலைமை தாங்க வந்திருக்கும் நீதியரசர், நம்முடைய மனத்தைக் கொள்ளை கொள்வது மட்டுமில்லை நம்முடைய கண்களையும் கவர்கின்ற இளைஞராக அமர்ந்திருப்பது ஒருபெரும் மகிழ்ச்சியாகும்.
அருமை நீதியரசர் சுந்தரேஷ் அவர்கள் உடம்பில் ஊர்கின்ற ஒவ்வொரு உதிரத்துளியும் நீதியும், நேர்மையும், வழக்காடுகின்ற வன்மையும் ஒவ்வோர் துளியுலுமே பளிச்சிடுகின்றது என்பதை இந்த நாடு நன்றாக அறியும்.
நீதியரசர் சுந்தரேஷ் அவர்கள் இந்த விழாவிற்கு நாங்கள் அழைத்தபோது மிக மகிழ்ந்து இசைந்தார்கள்.அவ்வாறு இசைந்ததற்கு ஒரு காரணமும் சொன்னார்.
பாரதி இலக்கியக் கழகம் நடத்திய போட்டியில் பங்கு கொண்டு இன்று நாடறிந்த பேச்சாளர்கள், வழக்கறிஞர்கள் மிகப் பெரிய நிலையை விளங்்குவது போல நீதியரசர் இராம சுப்பிரமணியம் கூட மாணவராக இருந்த போது இவ்விழாவில் பங்கு கொண்டவர் தான்.
நீதியரசர் அவர்கள் எனக்கு இன்று காலையிலே சொன்னார்கள். இந்த விழா நடைபெறுவதில் நானும் பங்கு கொள்வேன் என்று.
எனக்கு பெரிய மகிழ்ச்சி தருவது, என்னை விட இளையவராக இருக்கும் திரு.சுந்தரேஷ் அவர்கள் பங்கு கொள்வது தான்.எனவே, நீதியரசரை நான் மகிழ்சியோடு வரவேற்கிறேன்.
பொதுமக்களே
பாரதி விருது வழங்குவது என்பதை ஒரு சீரிய பணியாக பாரதி கலை இலக்கியக் கழகம் நடத்துகிறது.
உண்மையிலேயே ஒரு நெகிழ்ச்சியை சொல்வதென்றால், ஸ்ரீராம் நிறுவனங்களின் தலைவர் திரு.தியாகராஜன் அவர்கள்ஒருமாபெரும் விருதை பாரதியாரின் பெயரில் வழங்க வேண்டும் என்ற பேரவாவில் இருக்கிறார்.
அவருக்கு தொழில் நிறுவனங்களை நடத்துகிறவர்களெல்லாம் அறப்பணிகளில் ஆரவாரமில்லாமல் பங்கு பெறவேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்.
அந்தவகையிலேயே இன்று வழங்குகின்ற விருதும், பாராட்டும்கூட எளிய வகையில்தான் என்றாலும்கூட பாரதி பணிக்காக தன்னை ஆட்படுத்திக்கொள்கிறவர்களுக்கு ஸ்ரீராம் நிறுவனம் எந்த நேரத்திலும் கைகொடுக்கும் துணை
நிற்கும் என்று நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

Add a Comment