புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.
————————————–
ஔவை 81 – முத்து விழா
————————————–
பகுதி-4.
———–
பேராசிரியர் மு.வ.அவர்கள் அமைதியாகவும், ஆழமாகவும் சங்க இலக்கியப் பாடல்களை எங்களுக்கு கற்பித்து பாடல்களை எடுத்துக்காட்டிய திறம் இருக்கிறதே, அது எங்களால் மறக்கவே முடியாது.
பூக்களிலே சிறந்த பூ தாமரைப் பூ,
மரங்களிலே சிறந்த மரம் சந்தன மரம்,
இடங்களிலேயே உயர்ந்த இடம் மலைகளின் உச்சி,
எனவே அந்த மலை உச்சியில் தாமரையில்
நிறைந்த தேனை கொண்டுபோய், சந்தனத்தில்
போய் பொதிந்து வைத்தால் எப்படி இருக்குமோ
என்று நற்றிணைப் பாடலை அவர் எடுத்துக்காட்டியது எனக்கு இன்றைக்கும் நேரிலே உரைப்பது போல் இருக்கிறது.
சான்றோர்களின் நட்பு என்பது சாலப்பெரிய நன்மை தருவது அகன்றது ஆழமுடையது என்ற கருத்தை அந்தப் பாடலில் எங்களுக்கு பேராசிரியர் மு.வ. எடுத்துக்காட்டியதை நான் இப்போது பார்ப்பதற்கில்லை.

Add a Comment