POST: 2016-06-05T09:44:17+05:30

புகழ் பூத்த தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்கள், அண்மையில் முத்து விழா கண்டுள்ளார். 80 வயது நிறைந்து, 81ஆம் ஆண்டில் நுழைந்துள்ளார். கனிந்த வயதில், நிறைந்த வாழ்வில், செறிந்த அனுபவங்கள் கொண்ட அவருடன் அண்ணாகண்ணன், 2016 மே 2ஆம் நாள் நிகழ்த்திய தொலைபேசி உரையாடல்.
————————————–
ஔவை 81 – முத்து விழா
————————————–
பகுதி-14…

பிறகு என் மக்கட்செல்வங்கள், அவர்கள் தங்கள் கல்விச் செல்வத்தினால், அயல் நாடுகளில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், என்னுடைய துணைவியாரும் பெரிய மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றதனால், நாங்கள் இருவரும், ஆஸ்திரிலேலியா நாடு, தென்னாப்பிரிக்க நாடு முதலிய நாடுகள் பலவற்றிற்குச் சென்று, ஒரு மூன்று நான்கு ஆண்டுகள் கழித்த பிறகு, மீண்டும் சென்னைக்குத் திரும்பினேன். திரும்பிய பிறகு எல்லா தமிழ் வளர்ச்சி நிகழ்ச்சிகளுக்கும் நான் பங்கு கொள்வது மட்டுமல்ல, எந்த குழுவிலும் என்னையே தலைவராக நியமித்தார்கள்.

ஒரு இரண்டாண்டுகளுக்கு முன்பு கூட செம்மொழி நிறுவனத்தில் நான் துணைத் தலைவர் பொறுப்பேற்க வேண்டும் என்று மைய அரசில் சொன்னார்கள். செம்மொழி தொடங்கியபோது, செம்மொழி நிறுவனத்தை சென்னை மாநகரில், தலைமையிடம் உருவாக்கியபோதும், அந்த துணைத் தலைவர்களின் ஒருவராக இருக்க வேண்டும் என்று என்னுடைய பணியைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இந்த வகையில், எல்லா நிலைகளிலும், தமிழ் நிறுவனங்களிலும், தமிழ் மன்றங்களிலும், பங்கு கொண்ட மகிழ்ச்சியோடும், தமிழ் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு உரையாற்றுகிற திறத்தோடும், என்னைப் பொறுத்த அளவுக்கு எந்த கருத்தை எப்போது பேசினாலும், ஒரு தெளிவான சிந்தனையும், ஓர் ஆழ்ந்த புதுமையும், அதனால் சமுதாயத்திற்கு பயன்படுகின்ற ஆக்கமும் ஆகிய மூன்றையும் நோக்கமாகக் கொண்டுதான் நான் உரையாற்றுவது வழக்கமாகும். அந்த வகையில் மேடையில் பேசி பேசி என்னுடைய வாழ்க்கை இந்த அளவுக்கு இப்போது வந்திருக்கிறது. நான் தொடர்ந்து என்ன சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்னுடைய நண்பர்கள் சொல்வதுபோல், மேடையில் வீசுகின்ற மெல்லிய தென்றலாக, பலபேர் மேனியில் பட்டு அவர்கள் மேனி நெருட மகிழ்ச்சி பெருக என்னுடைய கருத்துக்களை நான் சொல்லி வருகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *