POST: 2016-06-22T06:31:49+05:30

அருள் இயக்கம்
(ஔவை – சு.துரைசாமி, மதுரை)
சித்தாந்தம் இதழ் – 1945
பகுதி – 8

இனி, இந்த உயிர்க்கும் உடலுக்கும் இடையே மன முதலிய நுண்பொருள்கள் சான்றோர்களால் உணர்ந்துரைக்கப்பட்டுள்ளன. உடம்புக்கு முதற் காரணமான மாயையே மன முதலியவற்றுக்கும் முதல் என்பர். இதனைத் திருமூலர் “மனமாயை மாயை” என்றும், “மனத்து விளக்கது மாயா விளக்கே” என்றும் கூறுவது காண்க. மேனாட்டறிஞர் மனத்தை உடம்போடு சேர்க்காமல் அதனின் வேறாய் உயிரோடு ஒன்றிய பொருளாகக் கருதுகின்றனர். இந்த மன முதலிய பொருள்களை உயிர்க்கென அமைந்த அகக்கருவி என்றும், அந்தக்கரணம் என்றும் நம்மவர் குறிக்கின்றனர். அகக் கருவியாகிய மனம் உயிருடம்புகளின் பரிப்புக்கும் திருவருட் பரிப்புக்கும் இலக்காகி நின்று உடலினகத்தும் புறத்தும் அது கறங்குகிறது. அதன் பரிப்புக்கு உயிரும் உடம்பும் அகப்பட்டு இயலும். இதனைப் பின்வரும் படத்தால் அறிந்து கொள்ளலாம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *