POST: 2016-07-01T10:02:57+05:30

தனித்தமிழ் நூற்றாண்டு
————————————–
மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் -28.1.1977
————————————————————————————–
பாமாலை -பக்கம் 33
———————————
மணித்தமிழ் வளர்த்த மறைமலை
——————————————————-
டாக்டர் ஔவை நடராசன்
இயக்குநர் -மொழிபெயர்ப்பு
தலைமைச்செயலகம்

பறம்பு மலையில் புனித்தமிழ் இனித்தது!
மலைகளில் வளர்ந்த மணித்தமிழ் அதனைத்
தோள்களில் ஏந்தித் துணிந்து நடந்து
தானும் வளர்ந்தோர் தங்க மாமலை!
எம்மலை அம்மலை என்று நீர் வினவின்
அந்த மாமலை அழகு மறைமலை!
தாய்ப்பால் போலத் தமிழைக் கருதுக!
வாய்ப்போடு தமிழின் வளத்தைப் பெருக்குக,
செப்புத் தமிழைச் செழுந்தமிழ் வழக்கென
இப்படி முழங்கி எழுந்த(து) ஆங்கப்
பல்லா வரத்துப் பைந்தமிழ் வேங்கை,
அன்னைத் தமிழின் ஆக்கம் கருதித்
தன்னையே வழங்கிய தகைமை சான்றவர்,
வெண்ணீ றணிந்து விரும்புஞ் சிவநெறிக்
கண்ணாய் இருந்து கலைபல வளர்த்தவர்,
அமிழ்தினை ஒத்த அன்னவர் நினைவு
இமிழ்கடல் உலகில் இலங்குக இனிதே

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *