POST: 2016-07-28T10:18:39+05:30

சித்தாந்தம் இதழ் ஏப்ரல் 1965ல் வெளிவந்த கட்டுரை

ரஷிய மொழியில் திருக்குறள்
————————————————-

திருக்குறளை திரு.ஜெ.கிளாஸாவும், திரு.ஏ.கிருஷ்ணமூர்த்தியும் ருஷிய மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இது மாஸ்கோவில் 1963-ல் வெளியாக்கப்பட்டது.

திரு.கிளாஸாவ் சிறந்த தமிழ் அறிவாளி. முன்னுரையாக 30 பக்கங்கள் நூலைப் பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் எழுதியுள்ளார்.

குறள் இந்திய சமுதாய தத்துவத்தின் சிறந்த பரிணாமம். (The sublimation of Indian social thought) என்று பாராட்டியுள்ளார்.

ஆசிரியரான திருவள்ளுவர் பரந்த கொள்கையுடையவர் என்று குறிப்பித்துள்ளார். (free from cloistered and narrow sectarianism) குறளைப் பற்றி நூல்களைப் பற்றியும் (Kuralogy) கூறியுள்ளார்.

மொழிபெயர்ப்பு வெகு அக்கறையுடன் செய்யப்பட்டிருக்கிறதென்றும், அது ருஷிய கவி டார்ஜினியின் செய்யுள் நடைபோல் அமைந்திருக்கின்றதென்றும், ஜிக்கோஸ்லவாகியா தமிழ்த்துறைப் பேராசிரியர் டாக்டர் காமில் ஸ்வெலபில் ஒரு மதிப்புரையில் பாராட்டியுள்ளார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *